வாழ்நாளெல்லாம் (காலைதோறும்)
களிக்கூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும் உம் கிருபையினால்
நல்லவரே வல்லவரே
நன்றியையா நாள் முழுதும்
1.
புகலிடம் நீரே பூமியிலே
அடைக்கலம் நீரே தலைமுறைதோறும் – வாழ்நாளெல்லாம்
2.
உலகமும் பூமியும் தோன்றுமுன்னே
என்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே- வாழ்நாளெல்லாம்
3.
துன்பத்தைக் க்ணட நாட்களுக்கு
ஈடாக என்னை மகிழச் செய்யும்- வாழ்நாளெல்லாம்
4.
அற்புத செயல்களை காணச் செய்யும்
மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும்- வாழ்நாளெல்லாம்
5.
செய்யும் செயல்களைச் செம்மைப்படுத்தும்
செயல்கள் அனைத்திலும் வெற்றிதாரும்- வாழ்நாளெல்லாம்
6.
நாட்களை எண்ணும் அறிவைத் தாரும்
ஞானம் நிறைந்த இதயம் தாரும்- வாழ்நாளெல்லாம்
7.
ஆயுள் நாட்கள் எழுபதுதான்
வலிமை மிகுந்தோர்க்கு எண்பதுதான்- வாழ்நாளெல்லாம்
8.
ஆயுரம் ஆண்டுகள் உம் பார்வையில்
கடந்துபோன ஓர் நாள்போல- வாழ்நாளெல்லாம்